blog Details

blog

அதிக புகை வெளியிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வழக்கு

அதிக புகை வெளியிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வழக்கு


மதுரை : அதிக புகையை வெளியிடும் வாகனங்களை பறிமுதல் செய்ய பறக்கும் படைகள் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

வாகன நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால் மழையளவு குறைகிறது. ஓராண்டிற்கு மேல் இயங்கும் வாகனங்களுக்கு புகை தணிக்கைச் சான்று அவசியம். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

வாகனங்களை திரவ எரிபொருளிலிருந்து, காஸ் பயன்பாட்டிற்கு மாற்றினால் புகையை கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை போக்குவரத்துத்துறை நடைமுறைப்படுத்தவில்லை. புகை மாசால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாநில, மாவட்டம், தாலுகாக்கள் அளவில்பறக்கும் படைகள் அமைக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், போக்குவரத்துத்துறை செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், டி.ஜி.பி., பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.


Social Share :